மேசியாவின் அடையாளம் Jeffersonville, Indiana, USA 59-0329E 1ஒரு கணம் நாம் தலைகளைத் தாழ்த்துவோமாக. அன்புள்ள ஆண்டவரே, ''இயேசு அருகில் இருக்கிறார், எல்லாம் கைகூடும்“ என்ற பாடலை நாங்கள் கேட்கும்போது, அது பாடல் என்பதை விட மேலானதாக இருப்பதை நாங்கள் அறிந்தபடியால், எங்கள் இருதயங்களை சிலிர்க்க வைக்கிறது. அது உண்மை. நீர் இங்கு இருக்கிறீர். கர்த்தாவே இப்பொழுதும் கூட நீர் கூடாரத்துக்குப் பின்புறம் இருந்தீர் என்று நான் நம்புகிறேன். மழையில் முற்றுமாக நனைந்தபடி சிறு குழந்தையை கையில் சுமந்து கொண்டிருக்கும் அந்த தாய் மற்றும் வெகு தூரத்தில் மருத்துவமனையில் மரித்துக் கொண்டிருக்கும் பிரியமுள்ள நபருக்கு கூக்குரலிடும் அந்த வாலிபன்... ஆகியோர்களுக்காக எங்கள் ஜெபங்களைக் கேளும் ஆண்டவரே. மக்கள் சபையில் நாள் முழுவதும் இங்கு காலை ஆறு மணியளவில் இருந்து இங்கு அமர்ந்து இருக்கிறார்கள். உம்மைக் காண காத்திருக்கிறார்கள். கர்த்தாவே நீர் மரித்தோரிலிருந்து எழுந்த காரியத்தைக் குறித்து நாங்கள் பிரசங்கித்ததைக் கேட்டார்கள். ஆயிரத்துத் தொள்ளாயிர வருடம் கழித்தும் இன்னுமாக ஜீவிக்கும் அதே இயேசுவாக இருக்கிறீர். நீர் இன்னும் அதே இயேசுவாக இருக்கிறீர். தெய்வீக பிரசன்னத்தில், இருக்கும் ஒவ்வொரு வியாதியஸ்தரையும் சுகமாக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே‚ இந்த ஆராதனை முடியும்போது எங்கள் மத்தியில் பெலவீனமான மக்கள் ஒருவரும் இல்லாமல் போகட்டும். நீர் இங்கு இருக்கிறீர் என்று எங்களுக்குக் காண்பியும் கர்த்தாவே. 2ஈஸ்டர் காலையன்று இருந்த இரண்டு மனிதர்களைக் குறித்து நாங்கள் சிந்திக்கிறோம். யோசிக்கின்றோம்; அவர்கள் அதைரியப்பட்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த இரவுப்பொழுதில் அதைரியப்பட்ட அநேகர் இங்கு இருக்கிறார்கள்; வியாதிப்பட்டு மற்றும் குணமடையாமல் மற்றும் மருத்துவரால் கைவிடப்பட்டு இங்கு இருக்கிறார்கள். மேலும் அந்த இரண்டு பேர் வீதியில் செல்லுகையில், அந்நியர் ஒருவர் அவர்கள் மத்தியில் வந்து பேசினார். நாள் முழுவதுமாக வேத வசனங்களை எடுத்துப் பேசினார். மற்றும் இரவு நேரம் வந்தபோது அவர்களுடன் அறையில் சென்று கதவை மூடின பிறகு ஒரு காரியம் செய்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எவ்வாறு செய்தாரோ அவ்வாறே செய்தார். அதன் பிறகு அவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தான் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். பிறகு அவர்களிடத்தில் இருந்து மறைந்து போனபோது மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்தார் என்ற காரியத்தை துரிதமாக மற்றவர்களுக்குச் சொல்லப் போனார்கள். தேவனே‚ எங்கள் மத்தியில் இந்த இரவின்பொழுதில் அவர் சிலுவையில் அறையப்படும் முன் செய்த அதே காரியங்களை அவர் வந்து செய்யும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகள் அவருக்கு ஒன்றுமில்லை; அவர் நித்தியமானவர். மேலும் இந்த இரவின்பொழுதில் அநேகர் வீடு திரும்பும்போது துரிதமாகச் சென்று அவர்கள் மனைவியிடமோ அல்லது புருஷனிடமோ அல்லது அவர்களுக்குப் பிரியமானவர்களிடத்திலோ அல்லது அவர்கள் அண்டை வீட்டாரிடத்திலோ அவர் ஜீவிக்கிறார்‚ இன்று இரவு என் முன் தோன்றினார்; என் வியாதியை குணமாக்கினார்; நான் நலமாக இருக்கப் போகிறேன் என்று சொல்லட்டும். இதை அருளும் பிதாவே‚ இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 3பிரசங்கத்திலும் மற்றும் ஞானஸ்நானத்திலும் நான் அலுவலாக இருந்ததால் என் தொண்டை கொஞ்சம் கரகரப்பாக இருக்கிறது. அதற்காக மன்னியுங்கள். பிளோரிடாவில் இருக்கும் தீவில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து காய்ச்சல் தொடங்கியது. ஒரு மாதம் அளவு கூட்டங்களுக்காக கலிபோர்னியாவிற்கு காலையில் நான் கிளம்ப வேண்டும்; ஆனால், இந்த இரவின்பொழுதில் எனக்குப் பதிலாக பேசுகிறீர்களா என்று சகோதரர் நெவிலிடத்தில் கேட்டேன். மற்றும் அவர் பேசியிருந்தால் ஒரு அருமையான செய்தியைக் கேட்டிருப்பீர்கள். இந்த காலை ஆராதனையில் சகோதரர் நெவில் கொடுத்ததில் நாங்கள் மிக சந்தோஷப்பட்டோம். தொடர்ந்து தேவன் அவரோடு இருப்பாரென்றும் மற்றும் அவர் மேய்ப்பனாக இருக்க இந்த சபையோடு இருப்பாரென்றும் நாங்கள் நம்புகிறோம். 4இப்பொழுது வெளியில் நான் பில்லியை சந்தித்தபோது, அவன் என்னிடத்தில், ''அப்பா‚ மக்கள் நின்றுக் கொண்டு காத்திருக்கிறார்கள். சிலர் நாள் முழுவதும் காத்துக் கொண்டு நிற்கிறார்கள்“, என்றான். நல்லது இந்த ஆராதனை முடிவுக்கு நெருங்கி வருகிறது என்று நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் நிற்க வேண்டியதில்லை. மேலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்திற்குள் வரும்போது ஒரு தம்பதியர் காரில் இருந்து ஒரு வியாதிப்பட்ட குழந்தையோடு இறங்கினார்கள். அந்த கதவு அருகே கூட அவர்களால் வர முடியவில்லை. அது (குழந்தை) முழுவதுமாக நனைந்து இருந்தது. ஆனால் நான் இங்கு நிற்பது எவ்வளவு நிச்சயமோ அது போல அவர்கள் வெளியில் நின்றபோதே தேவன் அந்த குழந்தைக்கு சுகத்தைக் கொடுத்தார். எவ்வாறு தேவன் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார். பாருங்கள்‚ இன்றைய பிரசங்கம் முடிந்தபிறகு... இன்று காலை நான் ஐந்து பொருளின் மேல் பிரசங்கித்தேன். அது ஜீவித்தது, மரித்தது, அடக்கம் பண்ணப்பட்டது, உயிர்த்தெழுந்தது, மற்றும் வருகையைக் குறித்ததாகும். ஜீவித்தபோது அவர் என்னை நேசித்தார். மரித்தபோது அவர் என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்டபோது என் பாவங்களை தொலைவுக்குக் கொண்டு போனார். உயிர்த்தெழுந்தபோது என்னை இலவசமாக என்றென்றுமாய் நீதிமானாக்கினார். ஏதோ ஒரு நாளில் அவரின் வருகை இருக்கும்‚ ஓ, அது மகத்தான நாள்‚ இந்த இரவின்பொழுதில் நாம் அமர்ந்து அவர் தோன்றுவதற்காக கவனத்தோடு காத்திருக்கிறோம். 5நாம் ஏன் கூட்டமாக நெரிசலில் இங்கு இருக்கின்றோம்? சுவிசேஷத்தைக் கேட்க மக்கள் ஏன் வருகிறார்கள்? ஆயினும் அதன் எளிமையில், உலகிலேயே மிகச் சிறந்த கூட்டத்தை இழுக்கும் அட்டையாக (CARD) உள்ளது. ''நான் உயர்த்தப்படும்போது எல்லா மனிதர்களையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்“, என்று இயேசு சொன்னார். இப்பொழுது காரியம் என்னவென்றால் நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த பக்திமார்க்கம் அது அசலானதா? அது சத்தியமானதா? அது சத்தியமாகுமென்றால் வேதாகமம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசிக்கலாம். அது சத்தியமில்லையென்றால் அதனோடு நாம் எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது. நாம் பாவ காரியங்களிலே தொடர்ந்து சென்று புசித்து, குடித்து, நாளை நாம் மரிப்போம் எனலாம். ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் காரியங்கள் சத்தியமானவை என்று அறிந்தபடியால் நான் அதற்கு நன்றியோடு இருக்கிறேன். மற்றும் உலகில் இதுமட்டும் தான் பக்திமார்க்கம்; ஆயினும் இது நான்காம் இடத்தில் இருக்கிறது. எனினும் உலகத்தில் இருக்கும் பக்திமார்க்கத்தில் இதன் நிறுவனர் மட்டுமே மரித்து, மறுபடியுமாக உயிர்த்தெழுந்து, இந்த இரவின்பொழுதில் ஜீவிக்கிறார். 6வேறு ஒரு நாளில் இந்த ஊரின் செய்தித்தாளை நான் படித்தேன்; அதில் ஒரு மனிதன் புத்தர் என்பவர் உயிர்த்தெழுந்ததாக இருந்தது. ஒரு மனிதனை வைத்து அவர் சிறிய புத்தர் என்று சொல்லுகிறார்கள் என்பதை அநேகர் செய்தித்தாளில் கண்டீர்கள். புத்தர் செய்தது போல் அவர் செய்ததாகச் சொல்லுகிறார்கள். எனவே அவர் எந்த ஒரு அற்புதமும் செய்யவில்லை; ஆனால் அவருடைய போதனைகள் மற்ற காரியங்கள் எல்லாம் புத்தரைப் போலவே இருந்தது. களத்தில் ஒரு பொய்யான நபரை புத்தர் கொண்டு இருப்பாரென்றால்; களத்தில் அசலான தேவ ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரை தேவன் வைத்திருக்கிறார். இப்பொழுது இந்த அருமையான காரியங்களைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், இது வேலை செய்யுமா? மனிதனின் பாவங்களை பரிசுத்த ஆவியானவர் மன்னிப்பாரா? அவனுடைய வியாதியை சுகமாக்குவாரா? நிச்சயமாகச் செய்வார். அவர் இன்னுமாக என்றென்றுமாய் தேவனாக இருக்கிறார். இயேசு தாமே நம்மத்தியில் வந்து இந்த இரவின்பொழுதில் அவர் ஜீவிக்கிறாறென்று அவரை நிரூபிப்பாரென்றால் வேதத்தில் அவர் வைத்திருக்கும் எல்லா வாக்குத்தத்தங்களையும் நம்மில் ஒவ்வொருவரையும் விசுவாசிக்கச் செய்யும். 7இதற்குமுன் என் கூட்டங்களில் கலந்து கொள்ளாத நபர் யாராவது இங்கு இருக்கிறீர்களா? இதற்கு முன் கூட்டங்களில் கலந்து கொள்ளாத நபர்கள், உங்கள் கரத்தை உயர்த்துங்கள், பாருங்கள் கிட்டத்தட்ட கூட்டத்தில் உள்ளவர்களில் பாதியளவு உள்ளனர். நான் சுகமளிக்கிறவன் அல்ல. சுகமளிக்கிறவர் என்று எந்த ஒரு மனுஷனையும் நான் நம்புவதில்லை. இயேசு கிறிஸ்துவே சுகமளிக்கிறவர். மேலும் அவர் பூமியில் இருந்தபோது தேவனே சுகமளிக்கிறவர் என்று சொன்னார். அவர் ஒருபோதும் சுகமளிக்கிறவர் என்று உரிமை கோரவில்லை. ஆனால் மேசியாவின் அடையாளத்தை மக்களிடத்தில் காண்பித்தார்; மற்றும் இருதயங்களின் இரகசியத்தை அறிவது மேசியாவின் அடையாளமாக இருக்கிறது. அது உண்மை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? பேதுரு அவருக்கு முன் வந்தபோது, பேதுருவிடத்தில் அவன் பெயரையும் மற்றும் அவன் தகப்பன் பெயரையும் சொன்னதை பேதுரு நம்பி விசுவாசித்த விதத்தினால், பின் நாட்களில் இயேசு அவனிடத்தில் இராஜ்ஜியத்தின் திறவுகோலையும்; சபைக்கு தலைமைப் பொறுப்பையும் கொடுத்தார். 8மரத்தினடியில் நாத்தான்வேலை பிலிப்பு சந்தித்தபோது, ''நான் யாரைக் கண்டுபிடித்தேன் என்று வந்து பார்! யோசேப்பின் குமாரனை‚ நசரேயனாகிய இயேசுவை!“, என்றான். அதற்கு தீவிர மதவாதியான அவன், ''நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?“, என்றான். அவன் அதற்கு எந்த மனிதனும் கொடுக்கும் சிறந்த பதிலாக, ''வந்து பார்‚ வெறுமனே குறை கூறாதே! நீயே வந்து பார்!“, என்றான். பிலிப்புடன் நாத்தான்வேல் வந்தவுடன் இயேசு அவனிடத்தில், ''இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்“, என்றார். அதற்கு நாத்தான்வேல்: ''ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?“, என்றான். இயேசு அவனை நோக்கி: ''பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்“, என்றார். அதற்கு நாத்தான்வேல்: ''நீர் தேவனுடைய குமாரன்; நீர் இஸ்ரவேலின் ராஜா“, என்றான். கிணற்றடியில் இருந்த ஸ்திரீயின் இருதயத்தில் இருந்ததை அவர் சொன்னார். இக்காரியங்கள் எல்லாம் அவர் மேசியா என்பதை நிரூபித்தது. மேலும் அந்த மேசியா இன்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து நமக்காக பிராயசித்தத்தை செலுத்தி; நம் வியாதிகளில் சுகமளித்து; நம் பாவங்களை மன்னித்தாரென்றால்; ஒரேயொரு காரியம் தான் அவர் செய்ய வேண்டும்; அதே அடையாளத்தை மறுபடியும் காண்பித்து, அவர் செய்த வாக்குத்தத்தங்களை நன்மையாக நிறைவேற்றி, அவர் இன்னும் ஜீவிக்கிறார் என்பதைக் காண்பிக்க வேண்டும். அது உண்மையல்லவா? நாம் ஜெபிக்கையில் அதை நாம் விசுவாசிப்போம். 9ஆண்டவரே‚ மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், சகோதரன் நெவில் அல்லது நான் எங்கள் ஜீவியம் முழுவதும் பேசினவைகளை விட நீர் சொல்லும் ஒரு வார்த்தையே மேலானதாக இருக்கும். உம்முடைய ஒரே ஒரு வார்த்தை மட்டுமே‚ கூட்டத்தில் இருக்கும் பாதி பேர்களான மக்கள் இது போன்ற கூட்டத்தில் இதற்குமுன் இருந்ததில்லை. தேவனாகிய கர்த்தாவே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே; இந்த அறையில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையை அனுப்பும்; பெந்தெகொஸ்தே நாளில் வந்த பரிசுத்த ஆவியானவரை அனுப்பும்; மற்றும் இந்த மக்களை அபிஷேகிக்கட்டும். என் தொண்டை கரகரப்பாகி இருந்தாலும் என்னை முற்றிலுமாக அவருடைய ஆவிக்கு ஒப்புக் கொடுக்கும்படியாக நான் செய்யட்டும்; ஏனெனில் நான் அர்ப்பணிக்கும் இந்த கரகரப்பான குரலில் அவர் பேசுவதற்காகவும், நான் அர்ப்பணிக்கும் என் கண்கள் மூலமாக அவர் பார்த்து தரிசனங்களையும் மற்ற காரியங்களையும் காண்பிக்கும்படியாகவும்; அவை அவரை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை காண்பிக்கும்; மற்றும் இந்த மக்கள் அதைப் பார்க்கும்போது மொத்தக் கூட்டமும் அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குத்தத்ததையும் கட்டித் தழுவிக் கொள்ளட்டும். அவர்கள் பாவம் செய்திருப்பார்களென்றால் மன்னிப்பிற்காக அவரைக் கட்டித் தழுவட்டும். அவர்களுக்கு வியாதி இருக்குமானால் அவருடைய தழும்புகளினால் நாம் குணமானோம் என்பதை அறிந்து கொள்ளட்டும். அதை அருளும் ஆண்டவரே‚ இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்‚ 10இப்பொழுது மகத்தான பலப்பரீட்சையாக இருக்கிறது. இங்கு இருநூறு அல்லது முன்னூறு மக்கள் முன்னால் அது மிகவும் சுலபம். ஐந்து லட்சம், (அரை மில்லியன்) மக்கள் முன்னால் அதே காரியம் நடக்கும்போது; அவர் தேவனாக இருக்கிறார். இப்பொழுது இங்கு எத்தனை பேர் வியாதிபட்டு ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள், கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள், பாதிக்கு மேல், எல்லோரையும் இங்கு கொண்டு வரமுடியாது. பில்லியை மறுபடியுமாக நான் கேட்க வேண்டும், ஜெப அட்டையை அவன் கொடுத்தானா? என்று கேளுங்கள்; அவன் அதைச் செய்தானா? (யாரோ, ''ஆம்“, என்கிறார்) சரி, சரி. கடந்த ஞாயிற்று கிழமை அல்லது கடந்த முறை நான் இங்கு இருந்தபோது ஜெப அட்டை எதுவும் கொடுக்கப்படவில்லை; மற்றும் இதற்கு முன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று நான் கேட்டேன். அநேகர் கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் கரத்தை உயர்த்தினார்கள். அவர்கள் கரங்களை உயர்த்திக் கொண்டு நிற்கையில் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மத்தியில் சென்று அவர்கள் யாரென்றும், மற்றும் அவர்களுக்கு என்ன வியாதியென்றும், அவர்களுக்கு என்ன நடந்ததென்றும் சொல்லி முற்றிலுமாக அவர்களுக்கு சுகமளித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை என்கிற அளவுக்கு கட்டிகள், மற்றும் எல்லா காரியங்களும் மறைந்து போகும்படி செய்தார். சில வாரங்களுக்கு முன்பு நடந்ததைக் கண்ட எத்தனை பேர் இங்கு இருக்கிறீர்கள்? 11ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையில் அழைப்போம். அது உள்ளுர் சபையினரையும் மற்றும் வெளி சபை மக்களையும் மற்றும் கூட்டத்தில் இருந்தவர்களையும் மற்றும் கூட்டத்தில் இதற்கு முன் கலந்து கொள்ளாதவர்களையும் ஜெப வரிசையில் வர தருணத்தைத் தரும். எல்லோரையும் ஒரே நேரத்தில் கொண்டு வர முடியாது. முடிந்தவரை அமைதியாக அவர்களைக் கொண்டு வரலாம். தேவனிடத்தில் நீங்கள் உத்தமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களைப் பொறுத்தவரை நீங்கள் உத்தமமாக இருங்கள். மேலும் இயேசு நம் மத்தியில் வந்து, பூமியில் இருந்தபோது, கலிலேயாவில் அவர் செய்த அதே காரியங்களை இங்கு செய்வாரென்றால்; உங்களது தேவையுள்ள காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதற்காக நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இந்த மேடையில் இங்கு வரவேண்டிய தேவையில்லை. அவர் விசுவாசத்தைக் காண்கிறார். கூட்டத்தில் சில வியாதிப்பட்ட மக்கள் ஜெப அட்டை இல்லாமல் இருப்பார்களாயின் அவர்கள் எப்படியும் சுகமடைவார்கள். வியாதியுள்ள எத்தனை பேர் ஜெபஅட்டை இல்லாமல் இருக்கிறீர்கள்? கரத்தை உயர்த்துங்கள். நல்லது அதிகமான ஜெப அட்டைகள் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறேன். பாருங்கள், சரி; நீங்கள் அப்படியே விசுவாசியுங்கள். இந்தப் பக்கமாகப் பாருங்கள். 12இயேசு பூமியில் இருந்த போது என்ன செய்தார் என்று நான் காண்பிக்கட்டும். ஒரு விசை ஒரு ஸ்திரீ அவரிடத்தில் வந்தாள். கூட்டத்தால் அவரிடத்தில் நெருங்க முடியவில்லை. அவளிடத்தில் ஜெப அட்டை இல்லை. அவருடைய மேல் அங்கியின் நுனியைத் தொட்டாள். ஏனெனில் அவள், இருதயத்தில் ''இந்த மனிதர் சத்தியத்தைச் சொல்லுகிறார் என்று நான் அறிவேன். அவருடைய மேல் அங்கியின் நுனியை நான் தொடுவேனென்றால் நான் சுகமடைவேன்“, என்றாள். அவள் இதை விட ஜனக் கூட்டமாக இருக்கும் அநேக மக்கள் கூட்டத்தில் சென்றிருக்கலாம்; ஆகவே அவருடைய அங்கியைத் தொட்டாள். இயேசு திரும்பி, ''யார் என்னைத் தொட்டது“, என்றார். பேதுரு கூட அவரைக் கடிந்து கொண்டு, ''அநேகர் உம்மைத் தொட முயற்சிக்கும்போது; ஏன் இதைப் போல் கேட்கிறீர்?“, என்றான். அதற்கு அவர், ''நான் பெலவீனப்பட்டதை உணருகிறேன்“, என்றார். பெலவீனத்திற்கு தரிசனம் காரணமாகும். அதில் அதிக நேரம் செல்ல முடியாது. மேலும் அந்த ஸ்திரீயைக் காணும்வரை அவர் கூட்டத்தைச் சுற்றிப் பார்த்தார். பிறகு, ''அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது, என்றும், அவள் விசுவாசம் அவளை சுகமாக்கியது“, என்றும் கூறினார். 13எத்தனை பேருக்கு அது தெரியும்‚ நம்முடைய பலவீனங்களுக்காக அவரை நாம் தொடத்தக்கதாக இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்று வேதாகமம் சொல்லுகிறது‚ அது சரிதானா? அப்படியானால் அவர் பிரதான ஆசாரியராக இருப்பாரென்றால்; நம்முடைய பெலவீனங்களுக்காக அவரை நாம் தொடலாம் என்றால்; மற்றும் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருப்பாரென்றால்; அன்றைக்குப் போல் இன்றும் செய்யமாட்டாரா? அப்படியிருக்க ஜெப அட்டை இல்லாதவராகிய நீங்கள் இந்தப் பக்கமாகப் பார்த்து உங்கள் இருதயத்தில், ''கர்த்தாவே நீர் என்னை சுகமாக்குவீர் என்று என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன். உமது அங்கியை நான் தொடட்டும்; மேலும் நீர் அந்த ஸ்திரீயிடத்தில் பேசியதைப் போல் சகோதரர் பிரான்ஹாம் மூலமாக என்னிடத்தில் பேசும். நான் உம்மை விசுவாசிக்கிறேன்“, என்று சொல்லுங்கள். அதுபோல் உத்தமமாக இருப்பீர்களா? மற்றும் தேவனை முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களா? 14சில நிமிடங்களுக்கு முன் பில்லி பால் இங்கு நின்றபோது, ''நீங்கள் அன்பு காணிக்கையை எனக்காக எடுத்தீர்கள் என்றான். அப்படி நடக்க நான் விரும்பவில்லை, ஆயினும் அதற்காக நன்றி“, என்னுடைய கலிபோர்னியா பயணத்திற்கு அது தேவையாக இருக்கிறது, அதை நான் சுவிசேஷத்திற்குக் கொடுத்துவிடுவேன். எனக்கு கொடுக்கும் அந்த சிறு காணிக்கைகளை அவை எப்படி உபயோகமாகிறது என்று நீங்கள் அறிவீர்களா? சில வாரங்களுக்கு முன் போர்ட்டோ ரிகோ மற்றும் ஜமைக்காவில் ஒன்பது இரவுகளில் நாற்பதாயிரம் மனமாற்றப்பட்ட கிறிஸ்தவர்களை பதிவு எடுத்தார்கள்; எது அதைச் செய்தது? உங்களுடைய தசமபாகம். அங்கு இருந்து நான் சென்றபோது அந்த தீவின் நீதிபதி இங்கு சுவிசேஷகர்கள் வந்து அதிகமான காணிக்கைகளையும் எடுத்துக் கொண்டு மற்றும் எங்களுக்கு அதிக செலவு உண்டாக்கினதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சகோதரர் பிரான்ஹாம் வந்தபோது ஒரு காசு (பணம்) கூட அவர் கேட்கவில்லை. அவருடைய ஹோட்டல் கட்டணத்தைக் கூட கேட்கவில்லை. அவருடைய போக்குவரத்து செலவை அவரே பார்த்துக் கொண்டார், என்றார். எது இதைச் செய்தது? உங்களுடைய பணம். அதை சரியாக செலவு செய்வதில் நான் கவனமாக இருக்கிறேன். ஆகவே நியாயத்தீர்ப்பில் நான் தேவனுக்கு முன்பாகவும் மற்றும் உங்களுக்கு முன்பாகவும் நிற்கும்போது அதற்கு கணக்கு கொடுக்க வேண்டும், அது சரியாகச் செய்யப்பட்டது. அவருடைய மகிமைக்காக என்னால் முடிந்தவரை நான் சிறந்ததைச் செய்வேன் என்கிற ஒரு நிலையை எடுத்துக் கொண்டேன். 15இப்பொழுது ஜெப அட்டை வைத்து இருப்போர் எல்லோரையும் ஒரே நேரத்தில் இங்கே கொண்டுவர முடியாது. ஒரு தடவைக்கு கொஞ்சப் பேராக கொண்டு வருவோம். ஜெப அட்டை எண் ஒன்று யாரிடத்தில் உள்ளது. உங்களால் எழுந்து நிற்க முடியுமானால், உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? பின்புறத்தில், பின்னால் இருக்கும் ஒரு கறுப்பின சீமாட்டி. இந்த பக்கமாக வாருங்கள் சீமாட்டியே. இங்கு வாருங்கள், மேடைக்கு பக்கமாக நில்லுங்கள். ஜெபஅட்டை எண் இரண்டு யாரிடத்தல் உள்ளது? எழுந்து நிற்க முடியுமானால், கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் இரண்டு. வெள்ளை நிறத்தினர் சீமாட்டி, சரி சீமாட்டியே, இங்கு வாருங்கள். இந்த கறுப்பின சீமாட்டியுடன் நில்லுங்கள். சரியாக இங்கே இருங்கள். இப்பொழுது இங்கு நிறைந்தவுடன் இந்தப் பக்கமாக அவர்களைக் கொண்டு வாருங்கள், டாக். 16ஜெப அட்டை எண் மூன்று, கரத்தை உயர்த்த முடியுமானால் உயர்த்துங்கள். அங்கு இருக்கும் கனவான், ஐயா இங்கு வாருங்கள், எண் நான்கு; கரத்தை உயர்த்த முடியுமா? சரி, சீமாட்டியே, இங்கு வாருங்கள். எண் ஐந்து; கரத்தை உயர்த்த முடியுமா? இங்கு இருக்கும் வாலிபன். இதுவரைக்கும் அவர்களில் ஒவ்வொருவரும் எனக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள். எண் ஆறு; கரத்தை உயர்த்துங்கள். எண் ஆறு? எண் ஐந்தை அழைத்தேனா? எண் ஐந்து, எண் ஆறு கூட எனக்கு அந்நியராக இருக்கிறீர்கள். எண் ஏழு, கரத்தை உயர்த்துவீர்களா? யாரிடத்தில் எண் ஏழு இருக்கிறது. கரத்தை உயர்த்துங்கள். நல்லது. அந்த நபரை எனக்குத் தெரியும் என்று நம்புகிறேன். எனக்கு தெரியும் என்று நம்புகிறேன். எண் எட்டு; கரத்தை உயர்த்த முடியுமானால் உயர்த்துங்கள். இங்கு இருக்கும் ஒரு சீமாட்டி; எண் ஒன்பது; நல்லது, சீமாட்டியே. எண் பத்து; நல்லது எண் பத்து, ஒரு சீமாட்டி. 17ஏதோ எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது; இங்கு இருக்கும் மனிதன் எந்த எண் கொண்டிருக்கிறார்? யாராவது பார்ப்பீர்களா? சில உதவிக்காரர்கள் இங்கு வந்து பாருங்கள். (யாரோ ஒருவர் சொல்லுகிறார் அவருடைய எண் எண்பத்து நான்கு) எண்பத்து நான்கா! நான் எண் பத்து அழைத்துக் கொண்டிருந்தேன். நன்றி. எண் பத்து; உங்களை எப்படியும் அழைப்போம். அது பரவாயில்லை. உங்களுடைய எண் என்னவென்று எனக்குத் தெரியும். அது எண்பத்து நான்கு; அவ்வாறில்லையா? நீங்கள் எண்பத்து நான்கு அல்லது ஏதோ ஒன்றை சொன்னீர்கள் அல்லவா? சரியே‚ நீங்கள் சற்று பொறுத்திருங்கள். நீங்கள் வெறுமனே விசுவாசியுங்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த அட்டை, ஜெபஅட்டை ஒரு வேளை உபயோகப்படுத்தப்படாமல் போகுமானால்; நீங்கள் இவ்வாறு நோக்கி, தேவனை விசுவாசியுங்கள். பிறகு, தேவன் உங்கள் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறாரா என்பதைப் பாருங்கள். சரியே‚ எண் பத்து தானா? பதினொன்று, சரியே‚ பன்னிரண்டு, இப்பொழுது உங்களால் எழுந்திருக்க முடியவில்லையென்றால் சற்று... எண் பன்னிரண்டு, பதிமூன்று, எண் பதிமூன்று பின்னால் இருக்கிறார்கள். பதினான்கு; எண் பதினான்கு பின்னால் இருக்கிறார்கள். எண் பதினைந்து. 18எந்தப் பக்கத்திலேயும் கொடுப்பார்கள். இதைக் கொடுக்கும் வாலிபர்கள், ''யாருக்கு ஜெப அட்டை வேண்டும் கரத்தை உயர்த்துங்கள்“, என்று சொல்லுவார்கள். அவர்கள் அட்டைகளை எடுத்து எல்லா எண்களையும் கலந்துவிடுவார்கள். எந்த எண் எங்கு போகிறது என்று யாருக்கும் தெரியாது. அவ்வாறே அவர்கள் கொடுக்கிறார்கள். எண் பதினான்கு, எண் பதினைந்து யாரிடத்தில் ஜெப அட்டை பதினைந்து, எண் பதினைந்து இருக்கிறது? எண் பதினாறு, பின்னால் இருக்கிறார்கள். எண் பதினேழு. இப்பொழுது எண் பதினாறு கட்டிடத்தில் அல்லது பாதையில் இருக்கிறார்களென்றால், இங்கே சுற்றிக் கொண்டு முன்னே வாருங்கள். மன்னியுங்கள் சகோதரியே; உங்கள் கரத்தை நான் பார்க்கவில்லை. நீங்கள் எண் பதினாறா? சரி பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது; எண் பத்தொன்பது; இருபது எண் இருபது, இங்கு இருக்கும் மனிதராவார். சரி சரி. இப்பொழுது பாதையில் அவர்கள் வருகிறார்கள். (யாரோ ஒருவர் சொல்லுகிறார் அது போதும் என்று) என்ன சொல்லுகிறீர்கள்? இப்போதைக்குப் போதும். சரி இந்த பக்கமாகப் பாருங்கள், விசுவாசியுங்கள். பியானோ வாசிப்பவர்கள் மென்மையாக நம்பிடுவாய் பாட்டைப் போடுங்கள். மிகவும் மென்மையாக. 19பாதையில் இருக்கும் அநேகர் எனக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள். உங்களை எனக்குத் தெரியாது. சிலர் இங்கு இன்னும் ஜெபஅட்டையோடு இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு ஜெபஅட்டை இல்லாமல் இருக்கக் கூடும். இந்தப் பாதையில் இருப்பவர்களை ஒழுங்குபடுத்திவிட்டு உடனே சில நொடிகளில் இன்னும் சிலரை நாம் ஜெப வரிசையில் அழைக்கலாம். இங்கு இருக்கும் கனவான், டாக் பின்னால் இருந்து வந்தவர், அவரை அழைத்திருக்கிறோம்; பதினாறு அல்லது ஏழு... பதினாறு நல்லது, முன்னால் வந்து உங்கள் இடத்தில் நில்லுங்கள் ஐயா‚ இப்பொழுது நீங்கள் அழைக்கப்படவில்லை என்றால் அதைக் குறித்து ஒரு சம்பந்தமும் இல்லை. பாருங்கள். நீங்கள் பார்த்து விசுவாசியுங்கள். 20(யாரோ ஒருவர் சொல்லுகிறார்; இன்னும் கூட பதினைந்து எண் உள்ள நபர் இங்கு இல்லை) எண் பதினைந்து இங்கு இல்லை. ஒருவேளை அந்த நபரால் எழுந்து நிற்க முடியாதிருக்கலாம். யாராவது வேறு ஒரு நபரின் ஜெப அட்டையின் எண்ணைப் பாருங்கள். ஒருவேளை அவர் செவிடாக, காது கேளாதவராக இருக்கக் கூடும். நீங்கள் இங்கு இருப்பீர்களென்றால் வரிசையில் வந்து நிற்கும்படி அன்போடு அழைக்கிறோம். ஒருவேளை சில நிமிடத்தில் திரும்பி வர வெளியே சென்றிருந்தால், அவர்கள் திரும்பி வரும்போது, அவர்களை வரிசையில் அழைக்கும் போது நிற்க வையுங்கள். வரிசையில் கொஞ்சம் பேரிடம் துவங்கின பிறகு பரிசுத்தாவியானவர் இந்த கட்டிடத்தையும் மற்றும் மக்களையும் அபிஷேகம் பண்ணவில்லையென்றால் இன்னும் சிலரை, அவர்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள அழைக்கலாம். 21இப்பொழுது இது தான் முக்கியமான கட்டம்; இந்த நேரத்தில் தான் நான் சத்தியத்தை சொன்னேனா அல்லது பொய் சொன்னேனா என்று தெரியும். இந்த நேரத்தில் தான் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரா அல்லது மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவில்லையா என்று நிரூபிக்கப்படும். இந்த நேரத்தில் தான் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார் அல்லது அவ்வாறு இல்லை என்பதைக் காண்பிக்கும். இப்பொழுது அவர் சுகமளிக்கிறவர் என்று அல்லது சுகமளிக்கிறவர் அல்ல என்று நிரூபிக்க வேண்டும். மேலும் எவரேனும் வியாதிபட்டவர்க்கு ஜெபிக்க என் இடத்தை எடுத்து கொள்ள விரும்பினால் நீங்கள் தாராளமாக வந்து என் இடத்தை எடுத்துக் கொள்ளலாம். 22ஜெப வரிசையில் நின்றுக் கொண்டு அந்த வரிசையில் இருந்து என்னை பார்ப்பவர்களில் எத்தனை பேர் என்னை அறியாதவர்களாக இருக்கிறீர்கள். மற்றும் உங்களையும் உங்களைக் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்து இருக்கிறீர்கள். கரத்தை உயர்த்துங்கள். கூட்டத்தில் இருப்போரில் அவர்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அறிந்திருப்பவர்கள் (வியாதிப்பட்டிருப்பீர்களானால்) கரத்தை உயர்த்துங்கள்? இப்பொழுது தேவன் என்ன செய்வார்? தேவஆவி இங்கு இருக்கிறார் என்று ஒரு வேதவசனம் இருக்கிறது. அது வேலை செய்யுமா? பரிசுத்தாவியானவருக்கு என்னை ஒப்புக் கொடுப்பேனென்றால் அது கிரியை செய்யும். மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக் கொடுக்கவில்லையென்றால் எனக்கு அது கிரியை செய்யாது. ''அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் இயேசு அங்கே அநேக அற்புதங்களைச் செய்ய முடியவில்லை“, என்றுள்ளது. இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். உங்களால் முடிந்த அளவு மிகவும் பயபக்தியாக இருங்கள். அமைதியாக நின்று கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஏதாவது செய்வாரேயானால் களிகூர்ந்து, விசுவாசியுங்கள். 23இப்போது ஆண்டவரே எங்களிடம் உள்ள எல்லாவற்றையும், நாங்கள் என்னவாக இருக்கிறோமோ... அவர்கள் கால்கள் மரத்துப்போகும் அளவு அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். மயக்கம் வரும் அளவுக்கு இங்கு அமர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே நீர் தேவன் என்று அவர்கள் அறியட்டும். மேலும் உம்முடைய கட்டளைப்படி இந்த மக்களை கூடும்படி அழைத்தேன். நான் இங்கு நிற்பது என்னை காண்பிப்பதற்காகவோ, அல்லது நான் பெரிய நபர் என்று சொல்லுவதற்கோ அல்ல, அல்லது வித்தியாசமாக செய்வதற்காகவோ அல்ல; ஆனால் ஒரு தூதன் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும் அதை உமது வார்த்தையால் உறுதிப்படுத்தியதினாலும் செய்கிறேன். இந்த இரவுப்பொழுதில் நீர் இயேசு கிறிஸ்து என்றும், மற்றும் மரித்து உயிர்த்தெழுந்த தேவ குமாரன் என்பதையும் வெளிப்படுத்தும். மேலும் சரீரத்தில் நீர் இங்கு இருந்து செய்த அதே ஊழியத்தை நீர் செய்யவே உம்முடைய மக்களில் நீர் ஜீவிக்கிறீர்; உம்முடைய சபையில் நீர் ஜீவிக்கிறீர் என்பதையும் அறியப்படுத்தும். அதை அருளும் கர்த்தாவே‚ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஆமென். 24இப்பொழுது பில்லி பால் எங்கு இருக்கிறான்? இந்த கட்டிடத்திற்குள் இருக்கின்றானா அல்லது வெளியே சென்றுவிட்டானா? யாராவது ஒருவர் இங்கு வந்து இந்த ஜெப அட்டைகளை எடுத்துச் செல்லுங்கள். வாருங்கள் சகோதரனே. (தெளிவில்லாத வார்த்தைகள்) அந்த ஸ்திரீயிடத்தில் ஜெபஅட்டை உள்ளது. அவரிடத்தில் அதைக் கொடு. மிகவும் பயபக்தியாய் இருப்பாயாக. இப்பொழுது எனக்கு தெரிந்தவரை இங்கு இருக்கும் இந்த சீமாட்டி எனக்கு அந்நியராக இருக்கிறார். அதற்குண்டான சரியான வேதவசனம் இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்பதே. ஒருவிசை கிணற்றடியில் இயேசு வந்தார். பரி. யோவான் 4, சமாரியாவைச் சேர்ந்த ஸ்திரீயைச் சந்தித்தார். அவள் பிரச்சனை என்ன என்று கண்டுபிடிக்கும்வரை அவளிடத்தில் சிறிது நேரம் பேசினார். அவளுடைய பிரச்சனை என்னவென்று சொன்னார். அதை அவர் செய்தபோது அவள் அவரை மேசியா என்று இனங்கண்டு கொண்டாள். எத்தனை பேர் அந்த காரியத்தை அறிந்திருக்கிறீர்கள்? அவர்களின் சம்பாஷணையை நினைவுகூருங்கள். அவர், ''ஸ்திரீயே தாகத்திற்குக் குடிக்கக் கொடு“, என்றார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவளுடைய ஆவியைப் பகுத்தறிகிறார். அதற்கு அவள், ''சமாரியருடனே யூதர்கள் சம்பந்தங்கலவாதவர்களானபடியால் சமாரிய ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்? மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே‚ கிணறும் ஆழமாயிருக்கிறதே‚“, என்றாள். அதற்கு அவர் அவளுக்குப் பிரதியுத்தரமாக: ''தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய்“, என்றார். 25ஆகவே அந்த சம்பாஷணை அவளுடைய பிரச்சனை என்ன என்று அறியும்வரை சென்றது. அவளுடைய பிரச்சனை என்ன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?அவள் விபச்சாரத்தில் ஜீவித்தாள். ஆகவே அவர், ''நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா“, என்றார். அதற்கு அந்த ஸ்திரீ, ''எனக்குப் புருஷன் இல்லை!“, என்றாள். இயேசு அவளை நோக்கி: ''நீ சொன்னது சரிதான். ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல“, என்றார். அவள் என்ன சொன்னாளென்று இப்பொழுது கவனியுங்கள். அவரை நோக்கி: ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்“, என்றாள். மேசியா வருகிறார் என்று அறிவேன்; அவர் வரும்போது, ''எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்”, என்றாள். ''ஏனெனில் அவர் தேவனும் தீர்க்கதரிசியுமாக இருப்பார் என்று மோசே அவரைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். மேசியா வரும்போது இதைச் செய்வார்! ஆனால் நீர் யார்?“, என்றாள். அதற்கு இயேசு: ''உன்னுடனே பேசுகிற நானே அவர்“, என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ ஊருக்குள்ளே போய் ஜனங்களை நோக்கி: ''நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் மேசியா அல்லவா?“, என்றாள். 26இப்பொழுது இங்கு ஒரு ஆங்கிலோ சாக்ஸன் மனிதன் முன்னால் ஒரு எத்தியோப்பியா ஸ்திரீ நிற்கிறார். ஜீவியத்தில் முதன் முறையான சந்திப்பு. நாங்கள் எப்படி சொல்லுவோம் என்றால் வெள்ளை இனத்து மனிதன் மற்றும் கறுப்பினர். அதுபோன்று ஒரு வேறுபாடு உண்டாக்கிய கேள்வி இயேசு முன் எழுந்தபோது அவர் துரிதமாக தெரிவித்தார், ''மக்களிடத்தில் நிறத்தினால் எந்த ஒரு வேற்றுமையுமில்லை. நாம் ஒரே விருட்சத்தில் இருந்து வருகின்றோம், ஆதாம் மற்றும் ஏவாள். கட்சிதமாக. நாம் ஜீவிக்கும் தேசத்தினால் நிறங்கள் மாறின; அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேவன் எல்லா ஜீவராசிகளுக்கும் மரித்தார். கருப்பினத்தவர், வெள்ளை நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர், மங்கிய நிறத்தவர், சிகப்பு நிறத்தவர், மற்றும் எல்லோரும். எல்லோருமே தேவனின் சிருஷ்டிப்புகளே‚ 27இந்த சீமாட்டி ஒரு காரியத்திற்காக இங்கு நிற்கிறார்கள். ஒருவேளை அவர்கள் விசுவாசியாக இருக்கக்கூடும். அல்லது அவ்வாறு இல்லாமல் இருக்கக்கூடும். ஒருவேளை பாவியாக இருக்கக்கூடும். அல்லது பரிசுத்தவாட்டியாக இருக்கக்கூடும். ஒருவேளை வியாதிப்பட்டு அல்லது வியாதியில்லாமல் இருக்கக்கூடும். ஒருவேளை பணப் பிரச்சனை இருக்கக்கூடும், இல்லை வேறு ஒருவருக்காக இருக்கக்கூடும். எனக்குத் தெரியாது. அவளை நான் கண்டதில்லை. மற்றும் எதற்காக நிற்கிறாள் என்று எனக்கு கொஞ்சமும் விவரம் இல்லை. அதை அந்த சீமாட்டியும் அறிந்திருக்கிறார்கள். அது சரி தானே சீமாட்டியே‚ (ஆம் ஐயா என்று அந்த சீமாட்டி சொல்லுகிறாள்) அது சரியென்றால் மக்கள் பார்க்கும்படியாக உனது கரத்தை உயர்த்து. வெறுமனே உனது கரத்தை உயர்த்து. இது நம்முடைய முதல் சந்திப்பு. இப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் சித்தமாக இருக்குமானால்... 28அவள் வியாதிபட்டிருப்பாளென்றால், உங்களுக்கு நான் எப்படி சுகமளிக்க முடியாதோ, அதேபோல் அவளையும் என்னால் சுகமளிக்க முடியாது. இயேசு இங்கு இருந்தாலும் அவளை சுகமளிக்க முடியாது; ஏனென்றால் அவர் கல்வாரியில் மரித்தபோது ஏற்கனவே சுகமளித்திட்டார். ஆனால் அவர் அதே இயேசு என்று நிரூபிக்க அவரால் ஒன்றைச் செய்யமுடியும், மற்றும் அதை அவள் விசுவாசித்தால் அவள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அவள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்போது நீங்கள் அதை விசுவாசித்தால் நீங்களும் கூட பெற்றுக் கொள்ளமுடியும். அது சரிதானே? இப்பொழுது அதை கர்த்தர் அருளட்டும். உண்மையில் பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்திற்கு நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். மேலும் தேவனின் மகிமைக்காக இயேசு கிறிஸ்து நாமத்தில் எல்லா ஆத்துமாக்களையும் என் கட்டுக்குள் எடுத்துக் கொள்கிறேன். 29இப்பொழுது சீமாட்டியே ஒரு நிமிடம் என்னை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் நீங்கள் இங்கு எதற்காக இங்கு இருக்கிறீர்கள் மற்றும் நீங்கள் யார் என்று எனக்கு ஒரு விவரம் கூடத் தெரியாது. ஆனால் தேவனுக்கு உங்களைக் குறித்து எல்லாம் தெரியும். ஆயினும் தேவன் நீங்கள் எதற்காக இங்கு இருக்கிறீர் என்று என்னிடத்தில் சொல்லுவாரென்றால் தேவ குமாரன் இயேசு கிறிஸ்து இங்கு இருக்கிறார் என்றும் மற்றும் அவர் பூமியில் இருந்தபோது செய்த கிரியைகளை இங்கு செய்வார் என்றும் விசுவாசிப்பீர்களா? ஏக இருதயத்தோடு கூட்டத்தார் விசுவாசிப்பீர்களா? 30காட்சி அமைக்கப்பட்டிருக்கையில் இப்பொழுது நம் இருவர் கைகளையும் உயர்த்தியிருக்கிறோம். மற்றும் நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியராக இருக்கின்றோம். இந்த காரியங்கள் இந்நாளில் நடக்குமென்றும் அதாவது இயேசு மரித்தோரிலிருந்து எழும்புவார் என்றும்; இவையெல்லாம் சம்பவிக்கும் என்றும்; அவருடைய ஊழியம் தொடரும் என்றும் மற்றும் இந்த கடைசி நாட்களில் அவர் வாக்களித்தது போல் கச்சிதமாக நடக்கும் என்றும் வேதாகமத்தில் பரிசுத்தாவியானவர் எழுதினார். அது சரிதானா? இந்த சீமாட்டி பதட்டமாக இருக்கிறார்கள். அது நிச்சயமாக இருக்கும். அவர்கள் கரங்களை ஒன்றாக தேய்த்துக் கொள்கிறார்கள்; ஏனெனில் இந்த சமயத்தில் அவர்கள் வித்தியாசமாக உணர்கிறார்கள். அவர்கள் என் முன்னால் நிற்பதினால் அல்ல; நான் அவர்களுடைய சகோதரன், அவ்வாறு அவர்களை செய்ய வைக்க இயலாது; ஆனால் ஏதோ ஒரு காரியம் நடக்கிறது என்று அவளுடைய எண்ணங்கள் சொல்கிறது. வெளிச்சம் மேலாக இருக்கும் அந்த படத்தை உங்களால் பார்க்க முடிகிறதா சகோதரியே? அது தான் உங்களை அவ்வாறு உணர வைக்கிறது. அது கர்த்தருடைய தூதனானவர். அது சரியாக உங்கள் மேல் இருக்கிறது. நீங்கள் முதுகு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் ஜெபிக்க வேண்டும் என்பதற்காக இங்கு இருக்கிறீர்கள். அது சரிதான். கரத்தை உயர்த்துங்கள். 31இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். உனக்கு ஐந்து புருஷர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னது போல், சகோதரர் பிரான்ஹாம் அதை யூகித்து இருக்ககூடும் என்று புதியவர்கள் சொல்லக் கூடும். அது யூகமா என்று பார்ப்போம். உங்களுக்கு முதுகுவலி என்று சொன்னது அது சரிதானா? (''ஆம்“ என்று அந்த சகோதரி சொல்கிறாள்) அது சத்தியம். (''ஆம் ஐயா‚”) உங்களுக்கு அறுவை சிகிச்சை கூட நடைபெற்றது. மற்றும் மருத்துவமனையில் இருந்து இப்பொழுது தான் வந்திருக்கிறீர்கள். மற்றும் தேவனுடைய ஊழியக்காரனாக நான் இருக்கிறேன் என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் புருஷன் இங்கு பின்னால் அமர்ந்திருக்கிறார். (''ஆம், ஐயா, அது சரியே‚“) அவருக்கும் கூட பிரச்சனை இருக்கிறது. உங்களுடைய புருஷனின் பிரச்சனை என்னவென்று நான் சொல்வேனென்றால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? (''ஆம், ஐயா‚”) அவருக்கு பக்கவாட்டில் பிரச்சனையும் மற்றும் முதுகுவலியும் இருக்கிறது. அது சரி தானா? கரத்தை உயர்த்துங்கள். வேறு ஒரு காரியமும் சொல்லுகிறேன்; ஒரு வாலிபனை நான் காண்கிறேன். உங்களுடைய மகனும் கூட இங்கு பின்னால் அமர்ந்திருக்கிறான். மேலும் உங்கள் மகனுக்கு ஒருவிதமாக மயக்கம் கொண்ட பிரச்சனை. (''ஆம், ஐயா,“) அது சரிதான். (''ஆம், அது சரியே. நன்றி இயேசுவே”.) திருமதி. ஸ்டோவல் என்பது தான் உங்கள் பெயர். அதுதான் உங்கள் பெயர். திருமதி. ஸ்டோவல் வீட்டிற்குச் செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்கள் ஜெபத்திற்கு பதில் அளித்தார். இயேசு கிறிஸ்து நாமத்தில் நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொள்ளலாம். 32இப்பொழுது வெறுமனே விசுவாசியுங்கள். கறுப்பின மக்களாகிய நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று உணர்கிறீர்களா? உங்களை அவ்வாறு உணர வைப்பது அவருடைய ஆவியே‚ இப்பொழுது இங்கு ஒரு வெள்ளை நிறத்தவரான ஸ்திரீ இருக்கிறார்கள். அவளை எனக்குத் தெரியாது. அவள் யார், எங்கு இருந்து வருகிறாள் மற்றும் எதற்காக வந்திருக்கிறாள் என்ற ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. அது சரியென்றால் கரத்தை உயர்த்து. இப்பொழுது நீ விசுவாசிக்கிறாயா? கிணற்றடியில் இருந்த ஸ்திரீக்குப் போல் மற்றும் கறுப்பின ஸ்திரீக்குச் செய்தது போல தேவன் அவளுடைய இருதயத்தில் இருக்கும் காரியங்களை வெளிப்படுத்துவாரென்றால், அவ்வாறு அவர் செய்வாரென்றால் எத்தனை வெள்ளை நிறத்தின மக்கள் விசுவாசிப்பீர்கள்? இங்கு கரங்களை உயர்த்தியபடியுள்ள நானும் இந்த ஸ்திரீயும் இது எங்கள் முதல் சந்திப்பாகும். ஒரு காரியம் சொல்லுகிறேன், இந்த சீமாட்டி இந்த இடத்தை சேர்ந்தவர் இல்லை. கிழக்குப் பகுதியில் இருந்து நீ வருகிறாய். இந்த பகுதியிலிருந்து பார்த்தால் அது மேற்கு திசையாக இருக்கிறது. அது சரி தான். ஓஹியோவில் உள்ள டேட்டன் (Dayton) பட்டணத்தில் இருந்து வருகிறாய். அது சரிதான். மேலும் நீ பெலவீனமாக இருப்பதால் இங்கு வந்திருக்கிறாய். மேலும் உனக்கு நரம்பு தளர்ச்சி உள்ளது. உன்னால் தூங்க முடியவில்லை. அதற்கு மருந்து எடுத்துக் கொள்கிறாய். உன்னை டிக்ஸி என்று அழைக்கிறார்கள். மேசன் அது சரிதான். திரும்பிச் செல். இந்த இரவின்பொழுதில் இருந்து நீ நன்றாக உறங்கப் போகிறாய். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். ஆண்டவரின் நாமத்தில் செல்வாயாக. 33ஜெப அட்டையில்லாமல் கூட்டத்தில் இருப்பவர்களே‚ பரிசுத்தாவியானவரின் அபிஷேகம் இங்கே இருக்கும் இவ்வேளையில் விசுவாசியுங்கள். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்‚ கொஞ்ச நேரத்திற்கு முன் ஒரு வயதான மனிதர் இங்கு நின்றாரே, அவரைக் குறித்து என்ன? அவரிடத்தில் தவறான எண் இருந்ததால் வரிசையில் நிற்க முடியவில்லை. எங்கே இருக்கிறார்? எழும்பி நில்லுங்கள். இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசியாக இருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி உங்களுடைய நுரையீரலில் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. அது சரியே‚ இப்பொழுது உங்களை விட்டு அது போய்விட்டது, வீட்டிற்குச் சென்று சுகமாய் இருங்கள். இயேசு உங்களை சுகமடையச் செய்தார்.(தெளிவில்லாத வார்த்தைகள்) விசுவாசம் கொள்ளுங்கள், மற்றும் நம்புங்கள். தேவன் தேவனாக இருக்கிறார். 34எப்படி இருக்கிறீர்கள், ஐயா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு சமயம் இயேசுவிடத்தில் ஒரு மனிதன் வந்தான். இரட்சிக்கப்பட்டு வேறு ஒரு நண்பனையும் அழைத்துச் சென்றான். அந்த நண்பர்... அவன் ஒரு விசுவாசி என்று சொன்னார். மேலும் அவருடைய பேச்சைக் கேட்டு அவன் அதிர்ந்துபோய் அவரிடத்தில் என்னை எப்பொழுது அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் பிலிப்பு உன்னை அழைக்கும் முன் நீ மரத்திற்கு கீழாக நின்றபோது நான் உன்னைப் பார்த்தேன் என்றார். அவன் இருந்த இடம் மலையைச் சுற்றி முப்பது மைல் தூரம் உள்ளது. அந்த ஜெப வரிசையில் வருவதற்கு கால்நடையாக ஒரு நாள் பிடித்தது; அவன் ஜெப வரிசையில் இருந்தான். 35உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்கு இயேசு சொல்லுவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களா? கூட்டத்திலிருப்போர் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களா? இவர் இங்கு இருப்பது அவருக்காக அல்ல. அது வேறு ஒருவருக்காக. அது ஒரு ஸ்திரீ மற்றும் அவள் மரண நிழலில் இருக்கிறாள். அது உங்கள் சகோதரி. சரியாக உங்களுடைய சொந்த சகோதரி அல்ல; ஒன்றுவிட்ட சகோதரி. அவள் இங்கு இல்லை. டென்னஸியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள். ஆகவே நீங்கள் அங்கு இருந்து வருகிறீர்கள். அந்த ஸ்திரீக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால் அதினால் ஏதும் பலன் இல்லை. அவளுக்காக நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். தேவன் உங்கள் விண்ணப்பத்தை அருள்வாராக. செல்லுங்கள், தேவன் இந்த மனிதனின் விசுவாசத்தின் அடிப்படையில் அந்த ஸ்திரீயை சுகமடையச் செய்து நலமாக்குவாராக. கர்த்தராகிய தேவனே அந்த ஸ்திரீயின் ஜீவனை எடுக்க இருக்கும் பிசாசைக் கடிந்துக் கொள்கிறோம். மற்றும் அவளுக்கு உறவினராக இருக்கும் இந்த நபர் அவளுக்குப் பதிலாக இங்கு நிற்கிறார்; அவள் ஜீவிக்கட்டும். எங்களுக்குப் பதிலாக கல்வாரியில் நீர் நின்று எங்களை சுகப்படுத்தினீர் மற்றும் உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம். அது அப்படியே ஆகக்கடவது. ஆமென்‚ விசுவாசத்தோடு செல்லுங்கள், சகோதரனே. வேறு எந்த எண்ணத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். 36எப்படி இருக்கிறீர்கள்? நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியராக இருக்கிறோம். இது தான் நம்முடைய முதல் சந்திப்பு. இப்பொழுது மிகவும் பயபக்தியோடு, கவனத்தோடு கேட்டு ஜெபியுங்கள். நாம் ஒருவரையொருவர் அறியாதபடியால் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கின்றோம். ஒருவேளை இதுவே நம்முடைய முதல் சந்திப்பாக இருக்கக்கூடும். அது சரிதானா? இது முதன்முறையாக நாம் சந்திக்கின்றோமென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்கள் பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு தெரியப்படுத்துவாரென்றால், நான் அவருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன் என்பதை விசுவாசிப்பீர்களா? உங்களிடத்தில் இப்பொழுது சொல்லுகிறேன் நாம் இதற்கு முன் சந்தித்ததேயில்லை. ஆனால் நீங்கள் ஒரு கெண்டகியன். (ஆம்) அது சரிதான். கெண்டக்கியில் உள்ள சாமர்செட்டைச் சேர்ந்தவன்.(ஆம், அது சரியே) அது முற்றிலும் சரியே. நான் கெண்டகியிலிருக்கும் பர்க்ஸ்வில்லைச் சேர்ந்தவன். மேலும் வயிற்று குடல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கீழ் குடல் பகுதியில் அது கட்டிகளாக இருக்கிறது. அது சரிதான் ஜீவல் (Jewel) திரும்பச் செல்லுங்கள். தேவன் உங்களுடைய சுகத்தை அருள்வாராக. தேவ குமாரனாக இருக்கும் உயிர்த்தெழுந்த இயேசுவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (கட்டிகளிலிருந்து சுகமடைந்த அந்த சகோதரி கூச்சலிடுகிறாள், ''ஓ“) நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களென்றால், இந்த சீமாட்டி ஏன் களிகூர்கிறார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். மரிக்கும் தருவாயில் நீங்கள் இருந்தால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள். (அவருடைய நாமம் மகிமைப்படுவதாக). 37உங்களை எனக்கு தெரியாது, நான் தவறாக சொல்லவில்லை என்று எண்ணுகிறேன், இன்று காலையில் நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒரு நல்ல காரியம் செய்தீர்கள் என்பதைப் பார்க்கிறேன். ஆனால் உங்களை அறிவேன் என்ற காரியத்தில், எனக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் அந்த தொட்டிக்குள் சென்றீர்கள். நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள். ஆயினும் இயேசு உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? கூட்டத்தார் அதை முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு ஸ்திரீ இருப்பதை நான் காண்கிறேன். மற்றும் அந்த ஸ்திரீ உங்களை விட மிக வயதானவர். அது உங்கள் தாயார். அவர் இந்த இடத்தை சேர்ந்தவர் அல்ல. ஜார்ஜியாவை சேர்ந்தவர். மேலும் அவள் மிகவும் ஒரு பதட்ட நிலையில் இருக்கிறாள். அது வாழ்கையின் சூழல். மாதவிடாய் நிற்கும் நிலை. மற்றும் உங்கள் தாயாருக்காக நீங்கள் நிற்கிறீர்கள். அது உண்மை. அதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் மற்றும் சுகமடைவார்கள். நீங்கள் விசுவாசத்தோடு செல்லுங்கள், எல்லாம் முடிந்து போகும். திடமாக இருக்கும்படி அவர்களிடத்தில் சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் வாலிபனே. விசுவாசம் கொள்ளுங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீ விசுவாசிக்கக் கூடாதிருந்தால் ஜெபி... 38நீங்களும் நானும் அந்நியர்களாக இருக்கின்றோம். தேவன் உன்னையும் அறிவார் என்னையும் அறிவார். ஆனால் உங்களுடைய பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரா? மற்றும் அவ்வாறு செய்வாரென்றால் அவரை நீங்கள் விசுவாசிப்பீர்களா? எத்தனை பேர் விசுவாசித்து, ''தேவனே, அந்த மனிதரிடத்தில் நீர் சொல்லுவீரென்றால் நான் விசுவாசிப்பேன்!“, என்று சொல்லுவீர்கள். ஒரு நிமிடம்... இந்த பெண் பிள்ளைகள் பின்னால் உட்கார்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் சீமாட்டி சுருள் சிரை நாளங்களினால் (VARICOSE) அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். மேலும் வேறு ஒருவருக்காக இங்கு அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். மேலும் அவளுடைய ஆவி பிரதான ஆசாரியரைத் தொட்டது; அவள் தேவனுடன் தொடர்பு கொண்டிருக்கிறாள். மனநிலை பிரச்சனை உள்ள உங்களுடைய நண்பருக்காக நீங்கள் ஜெபிக்கிறீர்கள். மேலும் அவர்கள் ஒரு சிறிய பட்டணத்தில் ஜீவிக்கிறார்கள். அது இந்தியானாவிலுள்ள கொரிடோன். அது சரிதான். நீங்கள் விசுவாசித்தால் நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆமென். 39உங்களுக்கு மாரடைப்பு வந்து சாலை முடிவுக்குச் சென்றுவிட்டீர்கள். உங்களின் பிரச்சனைகளில் ஒன்றைச் சொல்லுகிறேன். புகைபிடித்தல். ஒரு நிமிடம் பொறுங்கள்... அந்த ஆவி குதித்தது. அதைச் செய்ய அவனுக்கு விருப்பமில்லை. அது தான் உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. இங்கு உட்கார்ந்துள்ள இந்த வாலிபனும் கூட அந்த புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுகின்றான். முழு இருதயத்தோடு அவன் விசுவாசிப்பானென்றால் புகை பிடித்தல் பழக்கம் விட்டுப் போகும். நீர் விசுவாசித்தால்; அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால் மற்றும் அதன்படி கிரியைகளைச் செய்தால் உங்கள் விடுதலையைப் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கும் அவ்வாறே. நீரும் கூட இந்த இடத்தைச் சேர்ந்தவர் அல்ல. இங்கு இருந்து வெகு தொலைவில் உள்ள இடத்தைச் சேர்ந்தவர். கர்த்தரை ஸ்தோத்தரித்து ஓவென்ஸ்ப்ரேவுக்குத் திரும்பிச் செல்லுங்கள். தேவனின் மீது விசுவாசமாய் இருங்கள். உங்களை நான் அறிவேன்; ஆனால் உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது. கர்த்தர் அதை எனக்கு வெளிப்படுத்துவாரென்றால் அவரை விசுவாசிப்பீர்களா? அப்படியென்றால் உங்கள் வயிற்றுப் பிரச்சனை சரியாகிவிடும். சரி வீட்டிற்குச் செல்லுங்கள். மற்றும் களிகூருங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். உங்களை எனக்கு தெரியாது என்று எண்ணுகிறேன். நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்களாக இருக்கிறோமா? நான் சொல்லுவதை உண்மை என்று விசுவாசிக்கிறீர்களா? அது உண்மையா இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். (''ஆம்“) நல்லது உங்களுடைய இருதய பிரச்சனை உங்களை விட்டுச் செல்லும். வீட்டிற்குச் செல்லுங்கள்; சுகமடையுங்கள். 40உங்களை எனக்குத் தெரியாது, ஆனால் தேவனுக்கு உங்களைத் தெரியும். உங்களுடைய பிரச்சனை என்ன, மற்றும் எந்த இடத்தில் இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் சுகமடைவீர்கள் என்று விசுவாசிப்பீர்களா? உங்கள் முதுகில் பிரச்சனை. வீட்டிற்கு செல்லுங்கள், அது உங்களை விட்டுச் செல்லப் போகிறது. நீங்கள் சுகமடையப் போகிறீர்கள். அறுவை சிகிச்சை இல்லாமல் தேவன் அந்த கட்டியில் இருந்து சுகம் பெறச் செய்ய முடியும் என்று விசுவாசிப்பீர்களா? விசுவாசிக்கிறீர்களா? அதை விசுவாசிப்பீர்கள் என்றால் கரங்களை உயர்த்துங்கள். வீட்டிற்குச் சென்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை பெற்றுக் கொள்ளுங்கள். விசுவாசியுங்கள். கட்டி என்று நான் சொன்னபோது உங்களுக்கும் அதே இருந்தது. வினோதமாக இருக்கிறது. (''ஆம், எனக்கிருந்தது“) ஒரு வித்தியாசமான உணர்வு உங்களுக்குள் ஏற்பட்டது. ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு ஆவிகளும் குதித்தது. செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். விசுவாசியுங்கள். வாலிபனாக இருந்தாலும் கீல்வாதம் உள்ளது. ஆனால் இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிப்பீரா? அப்படி விசுவாசித்தீர்கள் என்றால், விசுவாசத்தோடு நடந்து செல்லுங்கள் முழுமையாக சுகமாகுங்கள். 41எத்தனை பேர் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் எழுந்து அங்கே அந்த மூலையை சுற்றி வரும்போது தேவன் உங்களை சுகமளித்தார் என்ற வார்த்தையை மட்டும் சொல்லி வேறு ஒரு வார்த்தையும் சொல்லாமல் இருப்பேனென்றால் மற்றும் ஒரு வித்தியாசமான உணர்வை நான் சொல்லும்போது நீங்கள் உணர்வீர்களென்றால் என்னை விசுவாசிப்பீர்களா? வீட்டிற்குச் செல்லுங்கள், நீங்கள் நலமானீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். நீங்கள் ஒரு வாலிபமான ஸ்திரீ, ஆனால் நரம்பு சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தேவன் அந்த நரம்பு சம்பந்தப்பட்ட நோயிலிருந்து சுகத்தை கொடுத்து அதிலிருந்து விடுபட வைப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? எங்கு இருந்து துவங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். சரியான நேரம் இதுதான். களிகூர்ந்து சந்தோஷமாகச் செல்லுங்கள். எல்லாம் முடிந்தது. உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். உங்களுக்கு நரம்புப் பிரச்சனை இருந்ததால் அது வயிற்றைப் பாதித்தது. (''அது சரியே“, என்று அந்த சகோதரன் சொல்கிறார்) நீங்கள் பின்னாலிருந்து எழும்பி நின்றபோதே சுகமடைந்தீர்கள்; ஐயா‚ ஆகையால் இவ்விதம் நீங்கள் வருவதற்குத்தான் நான் காத்திருந்தேன். வீட்டிற்கு செல்லுங்கள். உங்கள் இரவு உணவை நன்றாக புசியுங்கள். நலமாயிருங்கள். 42ஸ்திரீயின் பிரச்சனை உள்ளது; பதட்டமாக மற்றும் மன அமைதி இல்லாமல் இருக்கிறீர்கள். அது சரிதான். அது இப்பொழுது உங்களை விட்டு போகப் போகிறது. வீட்டிற்குச் செல்லுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சுகமடையுங்கள். விசுவாசம் கொள்ளுங்கள். உங்களுக்கு பெண்களுக்கு உள்ள கோளாறு உள்ளது. அது கசிவு உண்டாக்குகிறது. அது சரிதான். அது செயலிழந்த சினைப்பை. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசியுங்கள். வீட்டிற்குச் செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் ஒரு மோசமான நிலையில் இருக்கிறீர்கள்; அது உங்கள் இருதயத்தில் உள்ள அடைப்பு. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? (''ஆம்“ என்று அந்த சகோதரி சொல்கிறாள்) அதை விசுவாசிப்பீர்களென்றால், கர்த்தரின் நாமத்தில் செல்லுங்கள், மற்றும் சுகமாகுங்கள். தேவன் மீது விசுவாசம் கொள்ளுங்கள். சரி, சகோதரனே, உங்களைக் கூட இயேசு கிறிஸ்து சரியாக்குவார் என்று விசுவாசிக்கிறீரா? கர்த்தரைத் துதித்துக் கொண்டு வரிசையின் ஊடாக நடந்து செல்லுங்கள். 43கூட்டத்தில் இருக்கும் எத்தனை பேர் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறீர்கள்? அவர் ஒவ்வொன்றையும் அறிகிறார்... திருமதி நாஷ், உங்களை எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் மீது அந்த வெளிச்சம் இருக்கிறது. உங்களை எனக்குத் தெரியும். ஆனால் வேறு யாரோ ஒருவருக்கு நீங்கள் ஜெபிக்கிறீர்கள். அது ஒரு சிறிய பிள்ளை. சின்ன குழந்தை. அது இந்த இடத்தில் ஜீவிக்கவில்லை. அது டென்னஸியில் ஜீவிக்கிறது. மேலும் உங்கள் மருத்துவ நண்பருக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவருக்கு இருதய பிரச்சனை உள்ளது. (''ஓ, தேவனே!“, என்று அந்த சகோதரி சொல்கிறாள்) மற்றும் அவருடைய மனைவிக்கு லேசான மாரடைப்பு இருந்தது. (''ஓ, தேவனே‚”,) அதுசரிதான். விசுவாசியுங்கள், நீங்கள் சுகமடைவீர்கள். வாயின் மேல் விரலை வைத்து கொண்டு இருக்கையின் ஓரமாக உட்கார்ந்து இருக்கும் வாலிப சீமாட்டியே, என்ன நினைக்கிறீர்கள்? வாலிப சீமாட்டியே‚ உங்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்னொன்று வந்துவிடுமோ என்ற பயம் உள்ளது. அது சரிதான். அது சரியென்றால் உங்கள் கண்களிலிருக்கும் கண்ணீரைத் துடைக்கையில் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பயப்படாதீர்கள், அது திரும்ப வராது. அங்கே உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சீமாட்டியே, உங்களுக்கு ஆஸ்துமா உள்ளது. நுறையீரல் பிரச்சனை; புகை பிடிப்பதை நிறுத்துங்கள்; உங்களை விட்டு அது சென்றுவிடும். 44தேவன் மீது விசுவாசமாயிருங்கள். முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், நீ விசுவாசித்தால் எல்லாம் கைகூடும்‚ இங்குள்ள இந்த சீமாட்டிக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும் இந்த சீமாட்டி. ஒரு நிமிடம் அவர்கள் பெயர் திருமதி. ஈவான்ஸ், இங்குள்ள லூயிஸ்வில்லில் இருந்து வருகிறார்கள். அது சரிதான். உங்களை எனக்குத் தெரியாது. அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு இருதயப் பிரச்சனை மற்றும் காதுகளில் பிரச்சனை இருக்கிறது. அது சரிதான். அது சரியென்றால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். லூயிஸ்வில்லுக்கு திரும்பச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். அதை விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்து நாமத்தில் உங்கள் விசுவாசத்தை சவாலிட்டு சொல்லுகிறேன். இங்கு இருக்கும் எவரேனும் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களானால், பின்புறமாக இருப்பவர்களே, மிகவும் பின்னால் இருப்பவர்கள், விசுவாசியுங்கள், குறிப்பிட்ட எந்த இடத்திலும் நீங்கள் இருக்க வேண்டாம். இந்த பக்கமாக இருப்பவர்களே, விசுவாசியுங்கள். பின்னால் இருப்போரில் எத்தனை பேருக்கு சுகம் வேண்டும்? கரங்களை உயர்த்தி, ''ஆண்டவரே நான் விசுவாசிக்கிறேன்“, என்று சொல்லுங்கள். விசுவாசம் கொள்ளுங்கள். 45இந்த திசையில் இங்கே பின்னால் உட்கார்ந்துள்ள, உத்தமமாக ஜெபித்துக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை நான் பார்க்கிறேன். அந்த தரிசனம் அங்கே நிற்கிறது. அவர் ஒரு பிரசங்கி. அவர் ஒரு பிரசங்க மேடையில் நிற்கிறார், மேலும் அதிகமாக்கும்படி பிரசங்கிக்கிறார்... அவருடைய ஊழியத்தை அதிகமாக்கும்படி ஜெபிக்கிறார். என் ஜீவியத்தில் அவரை முன்பு ஒருபோதும் கண்டதில்லை. ஆனால் நீர் எதற்காக ஜெபிக்கிறீரோ சகோதரனே‚ அதை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுவீர்; கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பீராக. அவருக்கு பின்னால் ஒரு மனிதர்க்கு அவர் புஜத்தில் (ARM) ஏதோ பிரச்சனை; அவர் புஜத்தில் முடிச்சுகள் உள்ளது. அவரும் கூட... நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால், ஐயா, நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆமென். இந்த வரிசையில் கடைசியில் இரண்டாவதாக; சரியாகப் பின்னால் தன் தலையைத் தாழ்த்தி ஜெபித்துக் கொண்டிருக்கும் சிறிய சீமாட்டியே‚ உங்களுக்கு பித்தப் பையில் பிரச்சனை உள்ளது. அது தான் பிரச்சனை; சீமாட்டியே, கரத்தை உயர்த்துங்கள். ஜெபித்துக் கொண்டிருந்தது நீங்கள் தான். நீங்கள் அப்பொழுதே உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். 46இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இங்கு இருக்கிறாரா? அவரை விசுவாசிக்கிறீர்களா? நான் வேதாகம சத்தியத்தையே சொன்னேன் என்றும் தேவன் திரும்பவும் வந்து நான் சொன்னது சத்தியம் தான் என்று மிகச் சரியாக நிரூபிப்பாரானால் அப்பொழுது கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார் என்று விளங்குமே‚ அது சரிதானா? அப்படியென்றால் இதைச் செய்யுங்கள். சந்தேகிக்காதீர்கள். உங்கள் பக்கத்தில், உட்கார்ந்து இருப்பவர் மீது உங்கள் கரங்களை வையுங்கள். நீங்கள் விசுவாசித்தால் நான் இங்கு இருந்து ஜெபிக்கிறேன், ஒட்டுமொத்தமாக எல்லோரும் இப்பொழுதே சுகமாவீர்கள். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? ஒருவர் மீது ஒருவர் கரங்களை வையுங்கள். சுகத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் என்று விசுவாசிப்பவர்கள் ''ஆமென்“ என்று சொல்லுங்கள். நான் இந்த ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறேன். நான் ஜெபித்த பிறகு நீங்கள் எனக்கு பின்னாக ஜெபியுங்கள். 47ஓ ஆண்டவரே (சபையோர் சொல்லுகிறார்கள் ஓ ஆண்டவரே) வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே (வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே) என்றென்றுமாய் ஜீவிக்கிற ஜீவனுக்கு ஆக்கியோனே (என்றென்றுமாய் ஜீவிக்கிற ஜீவனுக்கு ஆக்கியோனே) நல்ல ஈவுகளைக் கொடுப்பவரே (நல்ல ஈவுகளைக் கொடுப்பவரே) கர்த்தாவே உங்களுடைய சுகமளிக்கும் வல்லமைக்கு (கர்த்தாவே உங்களுடைய சுகமளிக்கும் வல்லமைக்கு) நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன் (நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்) மேலும் அதை ஏற்றுக் கொள்ளும்படியான விசுவாசத்தை (மேலும் அதை ஏற்றுக் கொள்ளும்படியான விசுவாசத்தை) எனக்கு நீங்கள் அருளும்படியாக நான் ஜெபிக்கிறேன். (எனக்கு நீங்கள் அருளும்படியாக நான் ஜெபிக்கிறேன்) அது உங்களுடைய வாக்குத்தத்தம் (அது உங்களுடைய வாக்குத்தத்தம்) நீங்கள் கலிலேயா கரைகளில் நடந்த, (நீங்கள் கலிலேயா கரைகளில் நடந்த) பொந்தியு பிலாத்து கீழாக பாடுகள் பட்டு (பொந்தியு பிலாத்து கீழாக பாடுகள் பட்டு) மரித்து (மரித்து) உயிர்த்தெழுந்த (உயிர்த்தெழுந்த) உன்னதத்திற்கு ஏறின (உன்னதத்திற்கு ஏறின) மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக (மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக) வரங்களை மனிதர்களுக்குக் கொடுக்கிற (வரங்களை மனிதர்களுக்குக் கொடுக்கிற) அதே இயேசுவாக இருக்கிறீர் (அதே இயேசுவாக இருக்கிறீர்) என்று நான் விசுவாசிக்கிறேன். (என்று நான் விசுவாசிக்கிறேன்). பரிசுத்தாவியானவர் இங்கு இருக்கிறார் (பரிசுத்தாவியானவர் இங்கு இருக்கிறார்) நீங்கள் இங்கு இருந்தபோது (நீங்கள் இங்கு இருந்தபோது) என்ன செய்தீர்களோ (என்ன செய்தீர்களோ) அதே காரியங்களை செய்து கொண்டிருக்கிறீர் (அதே காரியங்களை செய்து கொண்டிருக்கிறீர்) என்று நான் விசுவாசிக்கிறேன்.(என்று நான் விசுவாசிக்கிறேன்.) அந்த வாக்குத்தத்தத்தை நான் கட்டித் தழுவுகின்றேன். (அந்த வாக்குத்தத்தத்தை நான் கட்டித் தழுவுகின்றேன்.) என் சுகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். (என் சுகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.) உங்களுக்காக ஜீவிக்க (உங்களுக்காக ஜீவிக்க) உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய (உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய) மற்றும் உங்கள் வெளிச்சத்தில் நடக்க (மற்றும் உங்கள் வெளிச்சத்தில் நடக்க) நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன். (நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன்.) நான் அறிக்கையிட்டதால் (நான் அறிக்கையிட்டதால்) உங்கள் தழும்புகளால் நான் சுகமானேனென்று (உங்கள் தழும்புகளால் நான் சுகமானேனென்று) இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். (இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்.) 48மிகவும் அமைதியாக உட்காருங்கள். உங்கள் அறிக்கையைக் குறித்து யோசியுங்கள். இப்பொழுது தேவன் உங்களுக்குள் வருகிறார். விசுவாசத்தோடு பரிசுத்த ஆவியை சுவாசியுங்கள். என்னுடைய உடம்பு பிரச்சனையிலிருந்து சுகமானேன். என்னுடைய எல்லா வியாதிகளும் எடுத்துப் போடப்பட்டது. சரியாக நீங்கள் தேவனின் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள். அந்த ஆவியை உங்களால் உணர முடிகிறதா? உங்கள் இருதயத்தை திறந்து கொடுங்கள்; உங்கள் விசுவாசத்தைக் காண்பியுங்கள். இங்கு இருக்கும் ஒரு சிறிய பெண்ணுக்கும் மற்றும் என் வலதுபுறமாக இருக்கும் இன்னொருவருக்கும் பரிசுத்த ஆவியானவர் மக்களையும் சுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையால் இந்த முழு மேடையும் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அவர் மக்கள் மத்தியில் இருக்கிறார். அவர் சபையினர் மத்தியில் இருக்கிறார். அது உங்களுடைய ஜெபமாக இருக்கிறது. இப்பொழுது சந்தேகத்தின் பிசாசு உங்களை விட்டு அகன்று போகும்படி ஆண்டவரிடத்தில் நான் ஜெபிக்கப் போகிறேன். 49ஓ தேவனாகிய கர்த்தாவே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, என் ஜெபத்தைக் கேளும், கர்த்தாவே; பரிசுத்தாவியானவர் இங்கு இருக்கும்போதே, இந்த மக்கள் அழிந்துபோகும் முன் துரிதமாக பிசாசை நான் கண்டனம் பண்ணுகிறேன். ஜெயத்தை உன்னிடத்தில் இருந்து இயேசு கிறிஸ்து எடுத்துக் கொண்டார். கல்வாரியில் அதை வென்றார். மரணத்தை, பிசாசை, பாதாளத்தை கல்லறையை அவர் வென்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து என்றென்றுமாய் ஜீவிக்கிறார். இவர்களில் இருந்து வெளியே வா, சாத்தானே‚ நீ ஒரு தோல்வியுற்ற நபர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் இந்த மக்களை விட்டுச் செல். அவர்கள் சுகமடையட்டும். 50உங்கள் சுகத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது எழும்பி நில்லுங்கள். இயேசு கிறிஸ்து நாமத்தில் எழும்பி நில்லுங்கள்‚ ஆமென். அவருக்கு நேராக கரங்களை உயர்த்தி அவரைத் துதியுங்கள். ஒரே ஒரு மனிதர் மட்டுமே எழும்பி நிற்காமல் இருப்பதை நான் பார்க்கிறேன். அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். கேன் ஹீலி, அவருடைய பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியும். அவருக்கு போலியோ உள்ளது. அங்கு பின்னால் சக்கர நாற்காலியில் இருப்பதுபோல் தெரிந்தது. பார்ப்போம். ஒரு காலுடன் இருக்கும் சீமாட்டியைக் காண்கிறேன். அது சரிதானா? தேவனின் தீர்க்கதரிசியாக நான் இருக்கிறேன் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு நான் அந்நியனாக இருக்கிறேன். என்னால் உங்களை சுகப்படுத்த முடியாது. உங்கள் பிரச்சனை என்னவென்று தேவன் என்னிடத்தில் சொல்லுவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படி நடக்குமென்றால் அது உங்களுக்கு உதவி செய்யுமா? உங்களுக்கு நீரிழிவு வியாதி உள்ளது. அது உண்மை. அதை விசுவாசித்து வீட்டிற்குச் செல்லுங்கள். சக்கர நாற்காலியில் இருப்பவரே நீங்கள் நலமாவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவே‚ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்; நீங்கள் சுகமாவீர்கள். இப்பொழுது கரங்களை உயர்த்தி சொல்லுங்கள், ''என்னை சுகமாக்கினதால் உமக்கு நன்றி கர்த்தாவே; என்னை சுகமாக்கினதால் உமக்கு நன்றி கர்த்தாவே. என்னை சுகமாக்கினதால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் கர்த்தாவே“. தேவன் நல்லவர்‚ தேவன் மகத்தானவர்‚ தேவன் அருமையானவர்‚ தேவன் நிஜமானவர்‚ தேவன் இங்கு இருக்கிறார்‚ பரிசுத்த ஆவியானவர் இங்கு இருக்கிறார். தேவனின் வல்லமை இங்கு இருக்கிறது. தேவனின் குமாரன், இயேசு கிறிஸ்து, என்னை முழுமையாக சுகமாக்கினார் என்று இப்பொழுது எனக்குள் இருக்கும் எல்லாவற்றோடும் நான் விசுவாசிக்கிறேன். ஆமென். 51இங்கு இருக்கும் யாராயினும் பாவத்தால் கண்டனப்படுத்தப்பட்டிருப்பாரென்றால் அல்லது அவர்களது பாவம் இரத்தத்தின் கீழாக இல்லையென்று அறிந்திருப்பார்களென்றால் இப்பொழுதே சரியாக உங்களுடைய எண்ணங்களை அறிந்த தேவ பிரசன்னத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவர் இதை என்னிடத்தில் சொல்லுகிறார் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? மற்றும் ஜெபத்தில் உங்களை நினைவு கூறும்படியாக நீங்கள் எண்ணுகிறீர்களா? இங்கு இருக்கும் எல்லோரும் கரங்களை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை, உங்களை, உங்களை அது சரிதான் பின்னால் அங்கு இருப்பவர் உங்களை இங்கு இருப்பவர் பின்னால் அங்கு இருப்பவர் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கு இருப்பவருக்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மகனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரியே‚ பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் தவறாகப் போவதில்லை. சுகமளிக்கும் ஆராதனை முடிந்த பிறகு சகோதரர் நெவிலிடத்தில் கொடுக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் ஆத்துமாவுக்கு சுகமளித்தல் அவர்களுக்குத் தேவை என்று ஏதோ ஒரு காரியம் சொல்லுகிறது. இயேசுவை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவீர்களென்றால் ஒரு நிமிடம் தலைகளைத் தாழ்த்துங்கள். நாம் ஜெபிக்கலாம். 52சகோதரர் நெவில் இந்த ஜெபத்தை நீங்கள் ஏறெடுங்கள். என் தொண்டை கரகரப்பாக உள்ளது, அதை செய்வீர்களா? (சகோதர் நெவில் ஜெபிக்கிறார், ''பரலோகத்தின் பிதாவே இயேசு கிறிஸ்து நாமத்தில் இந்த இரவின்பொழுதில் இங்கு மகிமையாக எங்கள் மத்தியில் உலாவினீர். சரீரம் மற்றும் ஆத்துமாவை நீர் விடுதலை செய்வீர் என்ற நம்பிக்கையோடு; இவர்கள் விசுவாசத்தோடு தலைகளைத் தாழ்த்துகையில், மனந்திரும்பின விசுவாசத்தோடு இருக்கும் இவர்களை நீங்கள் இரட்சிப்பீராக. இந்த இரவு அவர்களுக்கு ஒரு வேறுபட்ட இரவாக இருக்கட்டும். அவர்களுடைய வாஞ்சையை அருளும் ஆண்டவரே‚ மேலும் அவர்கள் பாவம் மன்னிக்கப்பட்டது என்று அறிகிற உணர்த்துதலை வாஞ்சையோடு அவர்கள் கேட்கும் அதை, இப்பொழுது அருளும்; ஓ தேவனே‚ எல்லோரையும் இரட்சியும். ஓ தேவனே தலைகளைத் தாழ்த்தியவர்கள்; அவர்கள் தேவைகளை ஜெபத்தில் கேட்டவர்கள்; அவர்களுக்காக மரித்தவரை இன்று முதல் அவர்கள் இருதயத்தில் திடமாக முடிவு எடுத்து அவருக்காக ஜீவிக்க திட்டம் கொள்ளட்டும்; இயேசுவின் நாமத்தில் இயேசுவுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்; ஆமென்‚ ஆமென்‚ கர்த்தருக்கு ஸ்தோத்திரம்‚).